குப்பையில் கிடந்த 10 பவுன் நகை: தூய்மை பணியாளரின் நேர்மையால் நடந்த பெண்ணின் திருமணம்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

கொருக்குப்பேட்டை பகுதியில் பெண் ஒருவரின் திருமணம் நடக்க காரணமாக இருந்த தூய்மைப் பணியாளரின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னை கொருக்குபேட்டையைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்ற தூய்மை பணியாளர் இன்று காலை குப்பைகளை தரம்பிரித்து கொண்டிருந்தபோது ஒரு பையில் பத்து பவுன் நகை இருப்பதை பார்த்து உள்ளார். இதையடுத்து உடனடியாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் நகைகளை ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக வைத்து இருந்த நகையை காணவில்லை என கதறி அழுதபடி புகார் கொடுக்க வந்துள்ளார். இது தொடர்பான விசாரணையில் மோகனசுந்தரம் குப்பையில் கண்டெடுத்த நகை முனியம்மாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை வடபழனி முருகன் கோவிலில் முனியம்மாவின் மகள் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. இந்த திருமணம் நடைபெற காரணமாக இருந்த மோகன சுந்தரத்தின் தன்னலமற்ற நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More News

3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை ரைசாவுக்கு மருத்துவர் கெடு

மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும் இதனையடுத்து அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் மருத்துவர் பைரவிக்கு பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா

தூத்துகுடி துப்பாக்கி சூடு: 15 கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் கேட்ட 15 கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பதில் கூறியதாக

தனுஷின் 'ரவுடி பேபி' பாடலில் ஒரு விழிப்புணர்வு பாடல்: மருத்துவரின் புதிய முயற்சி

தனுஷ் சாய்பல்லவி நடித்த 'மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று

இன்னா மயிலு, யாரை பார்த்து முறைச்சுகினே: வைரலாகும் சிவகார்த்திகேயன் பாடல்!

பிக்பாஸ் கவின் நடித்துள்ள 'லிப்ட்' என்ற திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை தான் காப்பாற்றிய சிறுவனுக்காக வழங்கிய மயூர் ஷெல்கே

சமீபத்தில் மும்பையில் உள்ள வாங்கனி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தாயுடன் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார்.