close
Choose your channels

100 வெளிநாட்டு டான்சர்கள்: மீண்டும் பிரமாண்டம் காட்டும் ஷங்கர்!

Friday, November 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் தான் என்பதும் பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர்தான் என்பதும் திரையுலகினர் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் பாடல்கள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது ராம்சரண் தேஜா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தற்போது பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த செட்டில் டான்ஸ் ஆடுவதற்காக 100 வெளிநாட்டு நடன கலைஞர்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமன் கம்போஸ் செய்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்கம் செய்யவிருப்பதாகவும், இந்த பாடலுக்கு ராம்சரண் தேஜா மற்றும் கியாரா அத்வானி ஆகிய இருவருடன் நூற்றுக்கணக்கான டான்சர்கள் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம்சரண் தேஜா இருவேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுரேஷ்கோபி, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை தில் ராஜு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.