3வது நாளாக 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 25 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு

தமிழகத்தில் நேற்றும் நேற்று முன் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து மூன்று நாட்களாக 1000ஐ தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 1091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24586 ஆக உயர்ந்துள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1091 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 809 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16585ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13706 என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 11,094 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 514,433 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

More News

கொரோனாவுக்கு பலியான 9 மாத குழந்தையின் உடலை வாங்க மறுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது ஒன்பது மாத குழந்தை திடீரென உயிரிழந்ததை அடுத்து அந்த குழந்தையின் உடலை வாங்க அக்குழந்தையின் தந்தை மறுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக காண்டம் கொடுத்த அரசு: ஏன் தெரியுமா?

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அவர்களுக்கு அரசே இலவசமாக காண்டம்கள் கொடுத்து அனுப்பிய தகவல்

மணமகனுக்கு கொரோனா: கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது.

இன்னொரு பேரழிவு!!! அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி தகவல்!!!

வட இந்தியாவில் ஏற்பட்ட ஆம்பன் புயலின் தாக்கமே இன்னும் சரி செய்யப்படாத நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

மும்பை: கடந்த இரண்டு வாரங்களில் 4 மடங்காக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.