காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு உண்டா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 12 2021]

நடப்பாண்டில் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு கிடையாது என்றும், நேரடியாக முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது என்பதும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டில் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More News

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகி!

அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்

பிக்பாஸ் அக்சரா ரெட்டியின் சிக்ஸ்பேக் வீடியோ வைரல்!

விஜய் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது என்பதும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தற்போதுதான் பிரச்சினைகளை

அபிஷேக் வைத்த அடைமொழி: எகிறிய இசைவாணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவிலும் இடம்பிடித்த அபிஷேக் மூன்றாவது புரமோவிலும் அவர்தான் இடம் பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படமும் ரெடி: விரைவில் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் வாங்க போறீங்களா? பண்டிகையில் செம ஆஃபர்!

இளைஞர் சிலருக்கு ஐபோன் வாங்குவதே தங்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது