10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: ஆல் பாஸ் என முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இது குறித்த வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு தமிழக அரசை திணற அடித்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 11ம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் 10ஆம் வகுப்பு தேர்வு குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து என்றும் மாணவர்கள் அனைவரும் பாஸ் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். அதேபொல் தமிழகத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விடுபட்ட பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.