10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் இந்த முடிவுகளை tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.inஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

கொரோனா, புபோனிக் பிளேக்கைத் தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று!!! பதற வைக்கும் தகவல்!!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது.

இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்த 42 வயது பெண்: நேரில் பார்த்த கணவரால் ஏற்பட்ட விபரீதம்

42 வயது பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்ததை நேரில் பார்த்த கணவன் செய்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ஆஜர்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் 

நீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்?

சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாதனை!!!

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழக விளங்குகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.