இந்தியாவில் ஒரே நாளில் 11 பேர் பலி: மொத்த எண்ணிக்கை 79ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தினசரி கிட்டத்தட்ட 500 பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் 472 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் மொத்தம் 3374 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளதாகவும் இந்தியாவில் மொத்தமாக 79 பேர் பலியாகி உள்ளனர் என்றும் சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின் குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்றும் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம்அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்ற அச்சம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.