close
Choose your channels

கவுண்டமணி படத்தில் நடிக்கும் 11 தயாரிப்பாளர்கள்.. சிறப்பு தோற்றத்தில் மாஸ் நடிகர்..!

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் கவுண்டமணி, நேற்று தனது 84 வது பிறந்த நாளை கொண்டாடிய போது அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

நடிகர் கவுண்டமணி ’பழனிசாமி வாத்தியார்’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தை அன்பரசன் என்பவர் இயக்க இருப்பதாகவும் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’முகமூடி’ படத்துக்கு இசையமைத்த கே என்பவர் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தற்போதைய பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மதுரை செல்வம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’கவுண்டமணி அவர்களை தேடி நிறைய கதைகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் அவருக்கு கதை பிடிக்காமல் போனதால் நடிக்கவில்லை, ’பழனிச்சாமி வாத்தியார்’ கதையை கேட்டதும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றும் தெரிவித்தார்.

இந்த படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக சஞ்சனா என்பவர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் தமிழ் திரை உலக சேர்ந்த 11 தயாரிப்பாளர்கள் நடிக்கின்றனர் என்றும் அது மட்டும் இன்றி தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. முழுக்க முழுக்க சென்னையில் உருவாக்கப்படும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.