1,100 ஆண்டு பழமையான தங்கப்புதையல்!!! மகிழ்ச்சியில் தொல்லியல் துறை!!!

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

 

இஸ்ரேல் நாட்டில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 1,100 ஆண்டுகால பழமையான தங்கப்புதையல் ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார். இதனால் அப்பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் மேலும் தொல்லியல் ஆய்வுகளைத் தொடரவும் அக்குழு முடிவு செய்திருக்கிறது.

இஸ்ரேல் நட்டின் ரிஹோவோட் தொழிற்பூங்கா அருகே தொல்லியல் துறையினர் பல மாதங்களாக ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த ஆய்வுகளில் பல தன்னார்வலர்களும் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். அப்படி தன்னார்வலராக இணைத்துக் கொண்ட இளைஞர் ஒருவர் 1,100 ஆண்டு பழமையான தங்கப்புதையலைக் கண்டுபிடித்துள்ளார். அப்புதையல் மண்ணில் மூடப்பட்டு இருந்ததாகவும் மீண்டும் எடுத்துக் கொள்ளும் நோக்கத்தில் வைக்கப்பட்ட புதையலாக இருக்கலாம் எனவும் தொல்லியல் குழு தெரிவித்து இருக்கிறது.

அப்புதையலில் மொத்தம் 425 தங்க நாணயங்கள் அதுவும் 24 கேரட் தூயத் தங்கத்துடன் இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மொத்த எடை 845 கிராம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புதையல் இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஜெர்மன் போன்ற ஆட்சிப் பகுதிகளை ஒன்றாக இணைத்து ஆட்சி செய்த அபாசித் ஹலிப்ஹெட் என்ற இஸ்லாமிய மன்னர் ஆட்சி காலத்தது என்றும் தொல்லியல் குழு தெரிவித்து இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வேறுசில பொருட்கள் அல்லது ஆவணங்கள் கிடைக்கலாம் என மகிழ்ச்சி தெரிவித்த தொல்லியல் துறையினர் அப்பகுதியில் தற்போது தற்காலிக குடில்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.