close
Choose your channels

தமிழகத்தில் முதல்முறையாக 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Sunday, May 31, 2020 • தமிழ் Comments

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை 500 முதல் 600 பேர்களாக இருந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 1149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22333 ஆக உயர்ந்துள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1149 பேர் பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 804 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 757 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12757என உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று 12049 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 491,962 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz