13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை!

ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் ஜப்பான் வீராங்கனை மோமிஜி நிஷியா(13). அதோடு மகளிர் ஸ்கேட்போட்டிங் (Skateboarding) பிரிவில் ஜப்பானுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தவரும் இவர்தான். கூடவே 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்பட்ட மகளிர் ஸ்கேட்போட்டிங் பிரிவில் 3 பதக்கங்களையும் ஜப்பான் வீராங்கனைகளே வாங்கி குவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஸ்கேட்போட்டிங் பிரிவிற்கு 13 வயதான ஜப்பான் வீராங்கனை மோமிஜி நிஷியா தகுதிப்பெற்றது குறித்து முன்பே பலரும் வரவேற்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்கேட்போட்டிங் போட்டியில் கலந்து கொண்ட அவர் 15.26 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றுள்ளார். இதே போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பியூனா நகீயாமா என்பவர் 14.49 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், லீல் என்பவர் 14.64 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

இதனால் 13 வயதில் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை நிஷியாவிற்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்பு கியோகோ இவாசாகி என்பவர் 14 வயதில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கத்தை வென்றிருந்தார்.

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தற்போது சீனா 15 பதக்கங்களுடன் முதல் இடத்தையும் அமெரிக்கா 14 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் வகித்து வருகிறது. ஜப்பான் 10 பதக்கங்களுடன் முன்னணி வரிசையில் காணப்படுகிறது. அடுத்ததாக யுகே 6 பதக்கங்களையும் இந்தியா

More News

2-ஆவது கணவருடன் மியா கலிஃபா விவாகரத்து .....! நண்பர்களாக இருக்க முடிவு...!

கவர்ச்சி நடிகை மியா கலிஃபா தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

விஜய்யின் 'சர்கார்' பட வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'சர்கார்' திரைப்படத்தின் மீதான வழக்கு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சூரரை போற்று' நாயகி அபர்ணாவின் அடுத்த பட தகவல்!

சூர்யா நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான 'சூரரைப்போற்று' கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே

'காசேதான் கடவுளே' ரீமேக்: ஒரிஜினலில் இல்லாத கேரக்டரில் நடிக்கும் புகழ்!

கடந்த 1972ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான மாபெரும் வெற்றி திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. சூப்பர் ஹிட் திரைப்படமான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்டது

'விக்ரம்' படத்தில் கமல் மகனாக நடிக்கும் இளம் ஹீரோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது