சென்னை அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்றிரவு விடிய விடிய அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய வாகனச்சோதனை மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் அதிரடி சோதனை செய்து கோடிக்கணக்கான ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு என்ற பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தங்கம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என கூறப்படுகிறது.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த 1381 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 

More News

முடிவுக்கு வந்தது விஷ்ணுவின் மற்றொரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம்

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் இணைந்து நடித்து வந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

நாளை தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் நாளை 39 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

அஜித் திரைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்

தேர்தல் எதிரொலி: நாளை தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத&#

மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் எடுத்து சென்ற கணவன்! ஈரோடு அருகே பயங்கரம்

மனைவியின் தலை, உடலை தனித்தனியாக துண்டித்து அதனை பைக்கில் எடுத்து சென்ற கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது