இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு: திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் 15 அர்ச்சகர்கள் உள்பட திருப்பதியில் மட்டும் சுமார் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் தலைமை அர்ச்சகர் சீனிவாச மூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் திருப்பதியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்று முதல் அதாவது ஜூலை 21முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத்குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார்

இதனால் திருப்பதி நகர் முழுவதும் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்றும் 11 மணிக்கு பின்னர் பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி நகர பொதுமக்கள் காலை 11 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 5000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

26 வயது பெண் டிவி ரிப்போர்ட்டர் சாலை விபத்தில் பலி!

26 வயது பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த சம்பவம் ஊடகவியலாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

பல மாதங்களுக்கு பின் சந்திப்பு: மகிழ்ச்சியில் தளபதி விஜய் குடும்பம்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு சில மாதங்களாக கனடாவின் சிக்கியிருந்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சென்னை திரும்பியுள்ளதால்

பிரபல அரசியல்வாதிக்கு எச்சரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்!

கந்த சஷ்டி கவசம் குறித்த பிரச்சனை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து தற்போது அரசியல் தலைவர்களும் கருத்துக்கூற தொடங்கிவிட்டனர்.

லயன் இன் லம்போர்கினி: இந்திய அளவில் டிரெண்டான ரஜினியின் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து என்ன செய்தி வெளி வந்தாலும், அவர் ஒருசில நிமிடங்கள் கேட் முன் நின்று பேட்டி அளித்தாலும் அல்லது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டாலும் உடனே இந்திய அளவில்

இன்று ஒரே நாளில் 4985 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 5000ஐ நெருங்கிய நிலையில் இன்றும் அதே 5000ஐ நெருங்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.