15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

விருதுநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகரை அடுத்த குமாரலிங்கபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும், இந்த சந்திப்பு நட்பாக மாறி அடுத்தகட்டமாக காதலாக மாறியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் சிறுவனும் சிறுமியும் திடீரென வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து ஊரில் குடித்தனம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் வேலை தேடி வருகிறேன் என்று அந்த சிறுவன் திருப்பூர் சென்று பல மாதங்கள் ஆகியும் திரும்பவில்லை என்றும், இதனையடுத்து சிறுமி கர்ப்பம் ஆனதால் சிறுவனைத் தேடி திருப்பூருக்கு சென்று அவரை கண்டுபிடித்து 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை வைத்து குடும்பம் நடத்தும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது

ஆனால் சிறுமி கர்ப்பம் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன், அந்த சிறுமியை திட்டியதோடு தன்னால் ஒரு கர்ப்பமான பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி விருதுநகருக்கு மீண்டும் திரும்பி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 15 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனின் செயலால் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

வித்தியாசமான விநாயகர் சிலைகளுடன் கொலு… அசத்தும் சென்னை பெண்!!!

நவராத்திரி வழிபாடுகளில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது கொலு வழிபாடு. இந்தக் கொலு வழிபாடு வேறுபாடு உள்ள இந்த சமூகத்தில்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மூலிகை தாவரம்…

எக்கினாப்ஸ் எனும் வகையைச் சார்ந்த 2 புதிய மூலிகை வகை செடியை விஞ்ஞானிகள் வடக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டுபிடித்து உள்ளனர்.

அர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது?

கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் நேற்று அந்த பிரச்சனை பெரிதாக வெடித்து.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழக முதல்வர்… புதிய திட்டத்தால் குவியும் பாராட்டுகள்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் அதன் மூலம் புதிய தொழில் திட்டங்களை மேம்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.

நம்ம ஊரில் 10 கோடி வருடங்களாக தொடர்ந்து வாழும் மீன்… உலக விஞ்ஞானிகளையே ஆச்சர்ய மூட்டிய சம்பவம்!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழையின் போது அங்குள்ள வயல்வெளிகள் எல்லாம் வெள்ளக்காடாக மாறியது.