அண்ணனை காதலித்து கர்ப்பமான 17 வயது சிறுமி: குமரியில் பரபரப்பு

17 வயது சிறுமி ஒருவர் தனது அண்ணன் முறை உறவுள்ள ஒருவரை காதலித்து கர்ப்பமான சம்பவம் கன்னியாகுமரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்கரை என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது வீட்டின் அருகே உள்ள அண்ணன் முறை உள்ள இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக பழகி உள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால், இருவருக்குமான நெருக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் அந்த சிறுமியை காதலிப்பதாகவும் உறவு முறை தவறாக இருந்தாலும் அவரையே திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி, அந்த இளைஞனுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார்.

மேலும் சிறுமி தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது இளைஞரை தனது வீட்டிற்கு அழைத்ததாகவும் சிறுமியின் வீட்டிலேயே இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென அந்த சிறுமி கர்ப்பம் ஆனதாக தெரிகிறது. இதனை அடுத்து இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து கருக்கலைப்பு செய்ய அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் இதுகுறித்து காவல் துறைக்கு புகார் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து இதுகுறித்து விசாரித்தபோது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் இளைஞரை கைது செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

17 வயது சிறுமி தனது அண்ணன் முறை உள்ள இளைஞர் ஒருவரை காதலித்து கர்ப்பமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.