சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, மாடியில் இருந்து வீசிய இளைஞர்கள்… பகீர் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 3 இளைஞர்கள் அந்தச் சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசியெறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரா நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அருகில் உள்ள சில இளைஞர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அவரது வீட்டின் 2 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசியெறிந்து உள்ளனர். அதனால் படுகாயம் அடைந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்றும் தற்போது சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய சிறுமியின் தந்தை, கடந்த சில தினங்களாகவே எனது மகளுளைச் சில இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தனர். கடந்த திங்கள்கிழமை போன்செய்து மிரட்டல் விடுத்தனர். பின்பு நேற்று இரவு வீட்டிற்கே வந்து எனது மகளை துன்புறுத்தி உள்ளனர். மேலும் தூக்கிச் செல்ல முயன்ற நிலையில் எங்களுடைய சத்தம் கேட்டு 2 ஆவது மாடியில் இருந்து வீசியெறித்து விட்டனர் என அவலக் குரலில் தெரிவித்து இருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமியை மாடியில் இருந்து வீசும் வீடியோ சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட்  தந்த தயாரிப்பாளர் தாணு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'நானே வருவேன்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.

மதுக்கடைகளை மூட முதல்வர் அதிரடி உத்தரவு: மாற்று வழியை கண்டுபிடித்த மதுப்பிரியர்கள்!

தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ள மதுக்கடைகளை மூட கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சைவ உணவில் பேலியோ டயட்டா? நிபுணர்கள் சொல்லும் விளக்கம்!

உடல் பருமனை குறைக்க விரும்பும் பலர் தற்போது பேலியோ டயட் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பேலியோ டயட்டை பின்பற்றுவது எப்படி? எளிய வழிமுறை!

நாகரிக சமூகம் உருவாவதற்கு முன்பு வரை மனிதர்கள் வேட்டையாடியே உணவுகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

"ஒன்றிய அரசு" என அழைக்க காரணம் என்ன....? முதல்வர் முக.ஸ்டாலின் பதில்....!

ஒன்றியம் என்ற வார்த்தையில், கூட்டாட்சித் தத்துவம் உள்ளதால், அதை பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம் என முதல்வர் கூறியுள்ளார்