சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்த கட்டிங்கள்… ஒரே நாளில் 196 முறை நில அதிர்வு.. காண சகிக்காத நிகழ்வு!!!

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

 

துருக்கியில் நேற்று அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது 7.0 ரிக்டர் அளவாகக் கணிக்கப்பட்ட நிலையில் நிலநடுக்கத்திற்கு பிறகு 196 முறை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக செய்தி வெளியிட்டு உள்ளது. உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத நடைமுறையாக நிலநடுக்கத்திற்கு பின் மீண்டும் பலமுறை நில அதிர்வுகள், அதுவும் நாடு முழுவதும் பல இடங்களில் உணரப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கத்தால் கடற்கரை ஓரமாக இருந்த இஸ்மீர் எனும் பகுதி கடுமையாகத் தாக்கப்பட்டு இருக்கறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்த சம்பவம் அங்குள்ளோரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. இந்த இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருப்போரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

நிலநடுக்கத்திற்கு பின் உணரப்பட்ட நில அதிர்வில் 4 ரிக்டர் அளவில் மட்டும் 23 முறை நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மேலும் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்து இருக்கின்றன. இதனால் 20 அடுக்குமாடி கட்டிடங்கள் முழுவதும் சரிந்து விழுந்து இருக்கிறது. அதில் பல மாயமாகி உள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 419 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அதேபோல இஸ்மீர் பகுதியில் ஏற்பட்ட கட்டிடப் பாதிப்புகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் 786 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. துருக்கியில் ஒரேநாளில் ஏற்பட்ட இத்தனை மாற்றங்களால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இணையத்தில் வைரலாகும் வெங்கட்பிரபு மகளின் பாடல்!

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் பேத்தியும், வெங்கட்பிரபுவின் மகளுமான ஷிவானி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் தற்போது பயின்று வருகிறார்

கப்பலையே தாக்கி அழிக்கும் ஏவுகணை… இந்தியக் கடற்படையின் புது அசத்தல்!!!

வங்கக் கடல் பகுதியில் கப்பலைத் தாக்கி அழிக்கும் புது ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

ஒரு கிலோ டீ தூள் விலை ரூ.75,000… தலைச் சுற்ற வைக்கும் தகவல்!!!

அசாம் மாநிலத்தின் குவஹாத்தி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விளைந்த சிறப்பு தேயிலை (டீ) தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை ஆகி இருக்கிறது.

வியட்நாமை சூறையாடிய சூறாவளி… 100 க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!!!

வியட்நாமில் கனமழைக்கு நடுவே “மோலேவே” எனும் சூறாவளி புயல் வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை ரசிகர்களுக்கு பிடித்த கெய்க்வாட்: ரஜினி-ருத்ராஜை ஒப்பிட்ட பிரபலம்!

நேற்றைய போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.