இதை செய்தால் நாளையே குழப்பம் தீரும். எடப்பாடிக்கு மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை

  • IndiaGlitz, [Wednesday,June 07 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பது தற்போது டிடிவி தினகரன் கையில்தான் உள்ளதாக கூறப்படுகிறது. தினகரனின் 3வது அணியில் ஏற்கனவே 27 எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். ஏற்கனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது செல்லாது என்று நாங்கள் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளோம். அந்த மனுவில் கூறியுள்ளபடி சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தேர்தல் கமிஷனுக்கு ஒரு நாலு வரி கடிதம் எழுதினால் போதும், தற்போதைய குழப்பங்கள் நீங்கிவிடும்.

தேர்தல் கமிஷன நாளையே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் செல்லாது என்று தீர்ப்பு அளித்துவிடும். அவ்வாறு தீர்ப்பு வந்துவிட்டால் சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட தினகரன் தானாகவே துணைப்பொதுச்செயலாளர் பதவியை இழந்துவிடுவார். எடப்பாடி அணியினர் இதை செய்வார்களா? என்று மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் ஓபிஎஸ் அணியுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ள முடியும் என்றும் இந்த தைரியமான முடிவை அவர் விரைந்து எடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால் தினகரனுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள்​ உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இது சாத்தியமா என்பது மிகப் பெரும் கேள்விக்குறியே.

More News

'பசங்க' பாண்டிராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாண்டிராஜ். இன்று பாண்டிராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாளை தெரிவித்து கொள்கிறோம்...

தமிழகத்தில் ஒரு நிர்பயா! ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு நாடே கொந்தளித்தது. பாராளுமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும், பெண்கள் அமைப்பினர்களும் குவிந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது...

அவங்க ஆட்டம் செம சூப்பர்: நடிகை சாயிஷாவை பாராட்டும் பிரபலம்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் நாயகி சாயிஷா நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான். ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் ஒப்பந்தமானதோடு இன்னும் இரண்டு தம

அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வையுங்கள். பெற்றோர்களுக்கு காமெடி நடிகர் வேண்டுகோள்

பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர்களும் ஏழைகளும் தனியார் பள்ளியில் தங்களை குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றே இந்த காலத்தில் விரும்புகின்றனர். எல்.கே.ஜி படப்பிடிப்பிற்கே லட்சக்கணக்கில் பணம் கறக்கும் தனியார் பள்ளிகளில் கடன் வாங்கி தங்களுடைய குழந்தைகளை சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டப்படும் பல பெற்றோர்களை நாம்

அஜித்தின் ஹாலிவுட் முன்னோடி நடிகருக்கு இரட்டை குழந்தை

தல அஜித் கடந்த சில வருடங்களாகவே நிஜத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தான் இருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே...