close
Choose your channels

மாலத்தீவில் மேலும் இரண்டு தமிழ் நடிகைகள்: வைரலாகும் வீடியோ!

Thursday, November 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ளார் என்பதும் அவர் ஹனிமூன் கொண்டாடும் விதவிதமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இன்று அவர் பதிவு செய்துள்ள தண்ணீருக்கு அடியில் உள்ள அறையில் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் காஜல் அகர்வாலை அடுத்து மேலும் இரண்டு தமிழ் நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முனி, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை வேதிகா மாலத்தீவு சென்றுள்ளார். அவர் மாலத்தீவில் விமானத்தில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலத்தீவுக்கு தீபாவளி கொண்டாடுவதற்கான வேதிகா சென்றுள்ளதாக கூறப்படுவதால் அவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதே போல் கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ’மாஸ்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பிரணிதா சுபாஷும் மாலத்தீவு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் மூன்று நடிகைகள் ஒரே நேரத்தில் மாலத்தீவு சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.