உருத்தெரியாமல் மாறிய பேருந்து: அவிநாசி அருகே நடந்த விபத்தில் 20 பேர் பலி

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்து உருத்தெரியாமல் மாறியுள்ள காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 25 பேர் எர்ணாகுளம், 4 பேர் பாலக்காடு, 19 பேர் திரிச்சூரை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு இன்று அதிகாலை கேரள மாநில அரசு சொகுசு பேருந்து ஒன்று 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராமல் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கி உருத்தெரியாமல் மாறியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'இந்தியன் 2' விபத்து: கிரேன் ஆபரேட்டர் தலைமறைவால் பரபரப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தினால்

'இந்தியன் 2' விபத்தில் கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் பலி: அதிர்ச்சி தகவல்

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

'இந்தியன் 2' படப்பிடிப்பில் திடீர் விபத்து: 3 பேர் பலி ,10 பேர் காயம் 

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2'படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள தனியார் பிலிம்சிட்டி ஒன்றில் நடைபெற்று வருகிறது 

இந்தியாவில் தொடரும் பணவீக்கம் –  யாரெல்லாம் பாதிக்கப் படுவார்கள்?

 ஒரு நாட்டில் நிலவும் பணவீக்கம் (Inflation), பணவாட்டம் (Deflation) இரண்டுமே கடுமையான பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தும்

பா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா! டைட்டில் குறித்த தகவல்

கடந்த ஆண்டு மகாமுனி, காப்பான் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆர்யா தற்போது 'டெடி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது