ரஜினியின் '2.0': வேற லெவலில் 'ராஜாளி நீ காலி' பாடல்

  • IndiaGlitz, [Saturday,October 28 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் இரண்டாம் பாடலான 'ராஜாளி' என்று தொடங்கும் பாடலை மதன்கார்க்கி எழுத இந்த பாடலை பிளாஸ், அர்ஜூன் சாண்டி மற்றும் சித்ஸ்ரீராம் பாடியுள்ளனர்.

ஐசா கசிமோ பேரண்டா
சுண்டக்க சைசு சூரண்டா

என்ற முன்னுரை வரிகளுடன் இந்த பாடல் தொடங்குவதால் மைக்ரோ ரஜினி இந்த பாடலில் தோன்றுவாரோ என்று எண்ண தோன்றுகிறது. அல்லது இந்த பாடல் 'ராஜாளி' என்ற வார்த்தையுடன் தொடங்குவதால் ஒரு பறவைக்கான பாடலாகவும் இருக்கலாம். இந்த படத்தில் அக்சயகுமாரின் சில ஸ்டில்கள் ஒரு பறவை போல் இருந்ததால் அவருக்கு இந்த பாடல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டும் இல்லாவிட்டால் சுண்டக்கா சைஸ் சூரன் vs ராஜாளி என்று ரஜினிக்கும் அக்சயகுமாருக்கும் கூட இருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த ராஜாளி பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் வித்தை காட்டியிருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும். அவரது இசைக்கு மதன்கார்க்கியும் தனது வார்த்தைகளால் விளையாடியுள்ளதால் பாடல் அட்டகாசமாக வந்துள்ளது.

ராஜாளி நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாவளி..
ராஜாளி ஜெம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி

என்ற ஆரம்ப வரிகளே மீண்டும் ஒரு தீபாவளியை கொண்டாடும் உணர்வு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை

இயக்குனர் ஷங்கரை பொருத்தவரையில் பாடல் காட்சிகளில் பிரமாண்டம் இருக்கும் என்பதும் விஷூவல் ட்ரீட் உறுதி என்பதையும் சொல்ல தேவையே இல்லை. இருப்பினும் இந்த படம் 3Dயில் உருவாகியிருப்பதால் வேற லெவலில் ஷங்கர் கண்டிப்பாக இந்த பாடலை உருவாக்கியிருப்பார். இந்த பாடலை கேட்கும்போதே திரையில் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. இருப்பினும் ஜனவரி 25 வரை பொறுத்திருந்துதான் ஆகவேண்டும்

More News

டுவிட்டர் பிரபலத்திற்கு சமோசா அனுப்பி சமாதானம் செய்த பிரபல நிறுவனம்

சமூக வலைத்தளமான டுவிட்டரில் கப்பார்சிங் என்பவர் பிரபலம் என்பது டுவிட்டர் பயனாளிகள் பலருக்கு தெரிந்திருக்கும். இவருக்கு சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்று சமோசா அனுப்பி

தமிழக அரசுக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடைப்பது தமிழக அரசின் முயற்சியால் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதை அடுத்து இந்த இருக்கைக்காக கடந்த சில மாதங்களாக முயற்சிகளில் ஈடுபடும் ஒருவராகிய ஜி.வி.பிரகாஷ்

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: நனவாகிறது தமிழர்களின் கனவு

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் முயற்சித்து வருவது

தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து உருவான புதிய யூனியன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கமல் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு: போலீசார் அவசர ஆலோசனை

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் கொடுப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்த ஒரு டுவீட், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தேவராஜன் என்பவர் வழக்கு தொடரந்தார்