close
Choose your channels

ரஜினி ரசிகர்களுக்கு ஒரே நாளில் டபுள் விருந்து

Friday, September 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'ரஜினி 165' படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் டீசர் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் ரஜினி ரசிகர்களூக்கு டபுள் விருந்து கிடைத்தது போல் உள்ளது.

வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள '2.0' படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன், சுதான்ஷி பாண்டே, அதுல் ஹூசைன், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள இந்த படம் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.