close
Choose your channels

மகேஷ்பாபுவின் அதிநவீன திரையரங்கில் '2.0'

Thursday, November 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ''2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை 3Dயில் பார்த்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்பதால் பல திரையரங்குகள் 3D டெக்னாலஜி வசதிகள் கொண்டவையாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் AMB சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் முதல் படமாக '2.0' திரையிடப்படவுள்ளது. ஐதராபாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 7 திரையரங்குகள் உள்ளது. இவைகளில் 1638 பேர் திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்

3D டெக்னாலஜி, டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம் உள்பட அதிநவீன வசதிகள் கொண்ட இந்த பிரமாண்டமான திரையரங்கில் சூப்பர் ஸ்டாரின் படத்தை பார்ப்பது என்பதே ஒரு தனி அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.