கதிராமங்கலம் தீ சென்னைக்கும் பரவுகிறதா? மெரீனாவில் திடீர் போலீஸ் குவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தின் குழாய்களில் கசிவு ஏற்பட்டு அங்குள்ள வயல்களில் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பராமரிப்பு பணி செய்து வரும் ஓஎன்ஜிசி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் கிராமத்தினர் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனையடுத்து கதிராமங்கலத்தின் தீ, சென்னைக்கு பரவிவிடாமல் தடுக்க, சென்னை மெரீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம் போன்று கதிராமங்கலம் மக்களுக்காக இளைஞர்கள் சென்னை மெரினால் கூடி போராட்டம் நடத்துவதை முன்கூட்டி தடுக்கவே முன்னெச்சரிக்கைக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

திங்கள் முதல் தியேட்டர்கள் மூடல்: நேற்று வெளியான படங்களின் கதி?

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் திங்கள் முதல் தியேட்டர்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

திங்கள் முதல் தியேட்டர்கள் மூடல்: நேற்று வெளியான படங்களின் கதி?

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் திங்கள் முதல் தியேட்டர்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சோம்பேறி விருதை வாங்க மறுத்த ஓவியா: மீண்டும் சினேகனுடன் மோதல்

பிக்பாஸ் குழுவின் கேப்டன் சினேகனுடன் ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருந்த நடிகை ஓவியா நேற்று விருது வழங்கும் விழாவில் மீண்டும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

கோவிலில் பிச்சையெடுத்த 'காதல்' பாபுவுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த விருச்சிககாந்த் என்ற பாபு, வறுமையின் பிடியில் சிக்கி கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே....

ஜிஎஸ்டி வரி எதிரொலி: தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி முடிவு

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பெரும்பாலான வணிகங்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரைத்துறையினர்களுக்கு கடும் பாதிப்பு இருப்பதால் திரைத்துறையினர், திரையரங்க உரிமையாளர்கள் இந்த புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..