21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு!!!

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் உள்ள கருப்பன்ன சாமி கோவிலின் 65 ஆம் ஆண்டு கொடை விழா ஞாயிற்றுக் கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சாமியார் ஒருவர் 21 அரிவாள்களை கிடைமட்டமாக நிறுத்தி வைத்து அதன் மீது நடந்து சென்றவாறே அருள்வாக்குக் கூறியிருக்கிறார். ஒரு தடவை இரண்டு தடவை அல்ல 68 தடவை என்பது தான் ஆச்சரியத்தை வரவைத்துள்ளது. மேலும் அரிவாளின் மீது நடந்து செல்லும் போது குழந்தைகளையும் சுமந்தவாறே குறி சொல்லியிருக்கிறார்.

சின்ன சாமி என்பவர் அந்த கோவிலில் 65 ஆவது ஆண்டு சிறப்பை முன்னிட்டு இப்படி குறி கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த விழாவில் 68 கிலோ மிளகாய் தூளைக் கரைத்து இவருக்கு அபிஷேகமும் செய்யப் பட்டது.

கருப்பச் சாமி கோவிலில் முன்னதாக பல்வேறு பொருட்களைக் கொண்டு பூஜையும் நடத்தப் பட்டது. இதில் 21 பொங்கல் வைத்தல், 21 அக்னி சட்டி ஊர்வலம் என்று எண்ணிக்கையினை அளவாகக் கொண்டு நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது இந்தக் கொடை திருவிழாவில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

2019-ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்த நபர்கள்... உலக அளவில் அம்பானி முதலிடம்..!

அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 16.1 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

வெளியாகும் முன்னரே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய 'சூரரை போற்று'

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..!

6 முக்கியமான நீதிபதிகள் விடுப்பில் சென்று இருக்கிறார்கள். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 

'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் யார்? புதிய தகவல்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதினை தட்டிச் சென்ற தமிழ் எழுத்தாளர்

இந்திய மொழிகளின் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசு தேசிய அளவில் 24 மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதமி விருதுகளை வழங்கி வருகிறது