நேற்று 5.. இன்று 28.. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

இந்தியாவில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்டஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நேற்று தான் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு என்று கூறியிருந்தனர். இன்று அந்த எண்ணிக்கை கூடியுள்ளது.

இதில் கேரளாவில் குணமாகி வீடு திரும்பிய 3 பேரும் அடங்குவர். மற்றவர் எல்லோரும் இந்த வாரம் மட்டும் பாதிக்கப்பட்டோர். ஐரோப்பாவில் இருந்து டெல்லி திரும்பிய 45 வயதுடையவர், துபாயில் இருந்து பெங்களூரு திரும்பிய ஹைதரபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர், ஆக்ராவைச் சேர்ந்த 6 பேர், ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 16 சுற்றுலாபயணிகள் மற்றும் இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கார் ஓட்டிய டிரைவர் ஆகியோர் கொரானோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸை எதிர்க்கும் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நிமோனியாமற்றும் பல நோய்களுக்கு உரிய மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் HIV-ன் மருந்துகள் கொடுத்தும் குணமாக்கி உள்ளனர். இது உலக சுகாதாரத்திற்கே ஒரு எச்சரிக்கை என்பதால் மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருமல், தும்மல் மூலமாக இந்த வைரஸானது மிக வேகமாக பரவுகிறது. எனவே தும்மும் போதும் இருமலின் போதும் டிஸ்யூ உபயோகியுங்கள். இல்லையென்றால் உங்கள் முழங்கையையாவது பயன்படுத்துங்கள். இப்போதைக்கு வைரஸ் பரவாமல் தடுப்பது தான் முக்கியம். மேலும் வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்ககளில் தவறாக பரப்பப்படும் மருத்துவ முறைகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இருமல், தொண்டைவலி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். வீட்டிலேயே இருக்க வேண்டாம். இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு தன்னால் முடிந்த அளவிற்கு செயல்பட்டு வருகிறது. மக்களாகிய நாமும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

More News

கொரோனா வந்தால் உதவ, ஏழை நாடுகளுக்கு ரூ.90,000 கோடியை ஒதுக்கியுள்ளது உலக வங்கி..!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீளுவதற்கு ஏழை நாடுகளுக்கு ரூ.90,00 கோடியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.

"ஒரு நாள் முதல்வர்" பாணியில் "ஒரு நாள் கலெக்டர்"- அசத்திய பள்ளி மாணவி

முதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராகத் தீடிரென்று பதவியேற்றுக் கொண்ட நடிகர் அர்ஜுன் ஒரே நாளிலேயே முடங்கி கிடந்த அரசாங்கத்தை தட்டி எழுப்புவார்

இணையத்தை கலக்கும் சிம்ரனின் அட்டகாசமான டான்ஸ் வீடியோ 

கடந்த 90 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை சிம்ரன் தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள்

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் சிபிராஜ் படங்கள்!

நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்து முடித்துள்ள 'வால்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 13ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. சென்சாரில் 'யூ'

முடிவடையும் நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தளபதி விஜய்யுடன் அவர் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது