28 வயது இளம் இசையமைப்பாளர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

  • IndiaGlitz, [Thursday,May 02 2024]

28 வயதான இளம் இசையமைப்பாளர் உடல் குறைவால் காலமான நிலையில் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார். இவர் ’மேதகு’ ‘ராக்கதன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த நிலையில் சில குறும்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் வேறு சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலை 6 30 மணிக்கு அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மறைவு செய்தி கேட்டு திரை உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் சொந்த ஊரான தஞ்சையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

’மேதகு’ திரைப்படத்தில் பிரவீன் குமார் கம்போஸ் செய்த ’தமிழுக்கு அமுதென்று பேர்’என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன நடிகர் சங்க தலைவர் நாசர்.. என்ன காரணம்?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தீபாவளி ரேஸில் இடம் பிடித்த கவின் படம்.. நெல்சனுடன் இணையும் படத்தின் முக்கிய தகவல்..!

நடிகர் கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின்

கபிலன் வைரமுத்து எழுதிய ஆங்கில நாவல்... குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டது..!

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்ட கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல்  ஆங்கிலத்தில் வெளியானது. மேலும் இரண்டு நிமிட சிறப்பு காணொளியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 2 கீர்த்தி சுரேஷ் படங்களின் படப்பிடிப்பு நிறைவு.. எப்போது ரிலீஸ்?

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'பேபி ஜான்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் நடித்து வந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து

அரசியலுக்கு வருகிறாரா அஜித்? முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி..!

நடிகர் அஜித் அரசியலுக்கு வருவது குறித்த அறிகுறியே இல்லாத நிலையில் அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது