த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா, இப்போதும் பிசியான நடிகையாக கோலிவுட்டில் வலம் வருகிறார். இவர் நடித்த 'மோகினி' திரைப்படம் இம்மாதம் வெளிவரவுள்ள நிலையில் தற்போது இவர் அரவிந்தசாமியுடன் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அஸ்வின் வினாயகமூர்த்தி இசையில் உருவான இந்த பாடலை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். ஏற்கனவே ரம்யா நம்பீசன் பல தமிழ், மற்றும் மலையாள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருந்தாலும் த்ரிஷாவுக்காக பாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர்.

More News

இரண்டு சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம். நாஞ்சில் சம்பத் பேட்டி

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்து அதிமுக தலைவர்களும் ...

சூர்யாவின் 'எஸ் 3' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள 'எஸ் 3' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளிவரவுள்ளது...

ஜனவரி ரேஸில் இணையும் த்ரிஷா படம்

தமிழ் திரையுலகில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மட்டுமே...

சென்னை திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஓபிஎஸ் கொடுத்த ரூ.50 லட்சம்

14வது சென்னை திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம்...