ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு; கிடுக்குப்பிடிக் காட்டும் சிபிஐ, அமலாக்கத்துறை!!!

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை மீதான மேல்முறையீட்டு வழக்குகள் இன்றுமுதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீதான விசாரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018 மார்ச் 19 ஆம் தேதி அமலாக்கத்துறையும் சிபிஐயும் தனித்தனியாக பல்வேறு மேல்முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்து இருந்தன. இந்த வழக்கை தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் தீவிர விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற விவாதங்களும் தற்போது ஊடகங்களில் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வுபெற இருக்கிறார். இதனால் வழக்கு தீவிரம் அடைந்து மிக விரைவில் முடிவுகள் எட்டப்படும் எனவும் நம்பப்படுகிறது. இதற்கு முன்னதாக சிபிஐ தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. தற்போது ஆ.ராசா போன்றோர் இந்த மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தைக் கூறுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மேலும் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி விரைவில் ஓய்வுபெற இருப்பதால் வழக்கு விசாரணையைத் துரித்தப்படுத்துமாறு அமலாக்கத்துறையும் சிபிஐயும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனுத்தாக்கல் செய்து இருந்தது. அந்த மனுவை கடந்த 10 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் இந்த வழக்கை குறித்து நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கருத்துகளை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் விடுதலை செய்யப்பட்டோருக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கை அவசர வழக்காக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விசாரிப்பதாக உறுதி அளித்தது. அந்த வகையில் இன்று 2ஜி அலைக்கற்றை வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணை தமிழகத்தின் அரசியல் மட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கருத்துகள் கூறப்படுகின்றன. இது அதிமுகவிற்கு சாதகமாக அமையுமா என்ற ரீதியிலும் சில எதிர்ப்பார்ப்புகள் கூடியிருக்கிறது.

More News

இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி… முன்னுரிமை யாருக்கு???

இந்தியாவில் கோவேக்சின், ஜைகோவ்டி என இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன

முதல் நாளே ஆரம்பித்த பிரச்சனை: ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பஞ்சாப் எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி?

அடுத்தடுத்து மூன்று தோல்விகளால் கடும் விமர்சனங்களைச் சந்தித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கம்பீரமாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது

ஓடிடியில் 'மூக்குத்தி அம்மன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில்

திருமணமான தங்கையை அடைய கணவருக்கு அனுப்பிய ஆபாச படம்: டிவி சீரியல் நடிகர் உள்பட 3 பேர் கைது!

திருமணமான தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவருடைய கணவருக்கு ஆபாசப்படம் அனுப்பிய டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது