close
Choose your channels

'2.0' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

Friday, October 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு 2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இந்த படத்தின் நாயகி எமி ஜாக்சன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.