ரஜினி 'நாட் அவுட்', அக்சயகுமார் 'அவுட்': 2,0 படத்தின் பிரமாண்ட புரமோஷன்

  • IndiaGlitz, [Wednesday,November 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து வருவது தெரிந்ததே.

ஹாலிவுட்டில் ராட்சத பலூன், துபாயில் ஸ்கை டைவிங் புரமோஷன் என உலக அளவில் இந்த படம் ரீச் ஆகிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்கோர் போர்டில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முடிவடைந்த இந்திய-நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி தொடர்களிலும் இந்த படத்தின் விளம்பரம் வந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள்

இந்த நிலையில் இந்த ஸ்கோர் போர்டு விளம்பரத்தில் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டா, இல்லையா என்பது குறித்து மூன்றாம் நடுவரின் முடிவின்போது ஸ்கோர் போர்டில் நாட் அவுட் என்ற அறிவிப்பு வரும்போது ரஜினியின் ஸ்டில்லும், அவுட் என்று வரும்போது அக்சயகுமாரின் ஸ்டில்லும் வருகின்றது என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள்? என்பது தெரியவில்லை.

இந்த படம் வெளியாக இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இன்னும் வித்தியாசமான புரமோஷன்களை படக்குழுவினர் அளிக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.