சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம்: பிரபல நடிகரின் வீடியோ!
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் செம்பரப்பாக்கம் ஏரி திறந்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை கடலில் மூன்று நிறத்திலான தண்ணீர் தெரிகிறது. ஆழ்கடலில் ஒரு வண்ணமாகவும், மத்திய பகுதியில் ஒரு வண்ணமாகவும், கடற்கரை ஓரத்தில் ஒரு வண்ணத்திலும் கடல் நீர் காணப்படுகிறது
கடலில் ஏற்பட்டுள்ள இந்த அபூர்வ மாற்றத்தை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நடிகர் சதீஷ், ‘3 வண்ணங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்., இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் இயற்கையின் அதிசயத்தை கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர்.
3 colours pic.twitter.com/hbcueO1VgF
— Sathish (@actorsathish) November 26, 2020