close
Choose your channels

24 மணி நேரத்தில் 3 மில்லியன்: தல ரசிகர்களின் கட்டுப்பாட்டில் டுவிட்டர்

Saturday, October 19, 2019 • தமிழ் Comments

அஜித் நடித்த ’நேர்கொண்டபார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் நடிக்க இருக்கும் 60வது திரைப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடந்தது. ‘வலிமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு நடைபெற்ற இந்த பூஜையில் தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் எச்.வினோத் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. நேற்று இந்த படத்தின் டைட்டில் ’வலிமை’ என அறிவிக்கப்பட்டதை அடுத்து அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் ’வலிமை’ என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். 

அதுமட்டுமின்றி அஜித் ரசிகர்கள் விடிய விடிய தூங்காமல் செய்த டுவிட்டர் பதிவுகளால் சரியாக 24 மணி நேரத்தில் 3 மில்லியன் டுவீட்டுக்களை பெற்றுள்ளது. ஒரு தமிழ் திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மூன்று மில்லியன் டுவீட்டுக்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. 

இதனை அடுத்து தல ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் டுவிட்டர் இணையதளம் இருப்பதாக ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். டைட்டில் அறிவிப்புக்கே இந்த அளவு என்றால் இன்னும் ஃபர்ஸ்ட்லுக், ஆடியோ வெளியிடு, டீசர், டிரைலர், பட ரிலீஸ் ஆகியவற்றுக்கு அஜித்தின் டுவிட்டர் ரசிகர்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz