நடமாடும் 'அம்மா உணவகம்': தமிழக முதல்வரின் அசத்தல் திட்டம்!

  • IndiaGlitz, [Wednesday,November 04 2020]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக நடமாடும் அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சென்னையில் ஏற்கனவே 200 வார்டுகளில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதும் ஏழை, எளிய மக்கள் இந்த உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் சாப்பிட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு நடமாடும் அம்மா உணவகங்களாக செயல்படுகிறது

முதல்கட்டமாக 27 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் இன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்து உணவு வழங்கினார். வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று மண்டலங்களில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்பதும், அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள் இந்த நடமாடும் அம்மா உணவகத்தில் அதே விலையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில், ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க, எளிய மக்களின் பசியை போக்க, மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தின் சேவை நீட்டிப்பாக சென்னையில் இன்று, 3 நடமாடும் அம்மா உணவகங்கள் துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்று கூறப்பட்டுள்ளது
 

More News

பாலாஜி-ஷிவானி வேற லெவல் ரொமான்ஸ்: 'மாஸ்டர்' பாடல் பின்னணியுடன் அசத்தல்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகளை ஆங்காங்கே காண முடிகிறது. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் சண்டை சச்சரவு இருந்து

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் பட நடிகை: 3வது வைல்கார்டா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் ரேகா, வேல்முருகன் ஆகிய இரண்டு போட்டியாளர்கள்

தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் வைத்த கார்த்திக் சுப்புராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் முக்கிய வேண்டுகோள்

'ஈஸ்வரன்' படப்பிடிப்பில் சாகஸம்; சிம்பு மீது புகார்!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிவரும் 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பிரபல எடிட்டர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் என்பவர் திடீரென காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்