கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது அவர்களிடம் இருந்த சான்றிதழை மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தம்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் மேலும் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்படுவது மக்கள் மத்தியில் தற்போது சிறிது கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

More News

மனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து 'மனம் திறந்து சொல்றேன் நீ நல்லா வருவ' என்று பாராட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு!

சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதனால் மனஅழுத்தத்தோடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

10 ரூபாய் டாக்டர் மறைவு....! ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...!

பழைய வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உடல்நலக்குறைப்பாடு உயிரிழந்தார்.

ஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா? கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வேற லெவலில் மக்களை சென்றடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சி போல் இதுவரை எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியும் புகழ் பெற்றதில்லை

கட்டாய ஓய்வு பெறும் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்...! மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...!

தமிழகத்தில் மாநில தலைமை ஆணையம் 'ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்' பொறுப்பில் உள்ள 9  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை  கட்டாய ஓய்வு பெற பரிந்துரை செய்துள்ளது.