தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 23 2021]

தமிழகத்தில் ஏற்கனவே நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் நோய்த்தொற்று அதிக வேகத்தில் உலக நாடுகளில் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 269 பேருக்கு ஒமைக்ரான் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்களுக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதைக் கண்டறிய அதிகாரிகள் ஜீன் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் S ஜீன் இல்லாத 54 பேரை மட்டும் பிரித்தெடுத்து அவர்களுக்கு மேலும் ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்து. இந்தச் சோதனையில் முதல் கட்டமாக 34 பேரின் முடிவுகள் வெளியான நிலையில் 33 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவருக்கும் அறிகுறியே இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 பேரின் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறிப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 3 ஆவதாக அதிகளவு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் அதிரடி

சிவகார்த்திகேயன் நடித்த அடுத்த திரைப்படத்திற்கு திடீரென நீதிமன்றம் தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இவருக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்: 'யானை' டீசர்

தமிழ் திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று 'யானை' என்பதும் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

விஷால் படத்தின் படப்பிடிப்பில் திருமண நாளை கொண்டாடிய பிரபலம்!

விஷால் நடித்து வரும் படப்பிடிப்பின் இடையே திருமண நாளை கொண்டாடிய பிரமுகரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான்: ரஜினி வெளியிட்ட ஆடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மகளின் ஹூட் செயலி வழியாக வெளியிட்ட ஆடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 'வாத்தி' படத்தின் நாயகி இவர்தான்: அவரே பதிவு செய்த டுவிட் வைரல்!

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'வாத்தி' என்றும் தெலுங்கு பதிப்பின் டைட்டில் 'சார்' என்றும் வெளியான தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல்