கொரோனா அச்சத்தால் பிளஸ் 2 தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்கள்: மறுதேர்வு வைக்கப்படுமா?

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று வெளியான செய்தியை பார்த்தோம். ஆனால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடியும் நிலையில் இருப்பதால் அந்த முழுமையாக முடித்துவிட தமிழக அரசு முடிவு செய்தது.

இதனை அடுத்து நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஆனால் இந்தத் தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பயம் காரணமாக கடைசி தேர்வில் மாணவர்கள் பலர் பங்கேற்கவில்லை என்றும் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததாலும், சில இடங்களில் போக்குவரத்து முடங்கியதாலும் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதும் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவர்களுக்காக மறுதேர்வு வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

எல்லா வசதி இருந்தும் ஏன் வீட்ல இருக்க மாட்டேங்குறீங்க: ரித்விகா

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகை ரித்விகா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

“ஹன்டா“ வைரஸின் அறிகுறிகள்!!! பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன???

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கொரோனாவின் கோரப்பிடியில்

கையெடுத்து கும்பிட்ட போலீஸ்: காலில் விழுந்து மரியாதை செலுத்திய சாமானியர்

கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருவதை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் அடுத்த 21 நாட்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு கார் கொடுத்து உதவிய தமிழ் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதி எம்.எல்.ஏஆகவும் உள்ளார்.

கொரோனா தாக்கியதால் சுவை, வாசனை திறனை இழந்த பிரபல பாடகர்: அதிர்ச்சி தகவல் 

உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து தரப்பினரையும்