பச்சை நிறத்தில் பூஞ்சை தொற்று… ஒருவர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,June 16 2021]

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் பச்சை நிறத்திலான புதிய பூஞ்சை நோய்த்தொற்று ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக விஷால்(34) என்பவர் கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். கொரோனாவினால் அவருடைய நுரையீரல் 90% பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதோடு 3 மாதங்களைக் கடந்த பிறகும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவருக்கு பூஞ்சை நோய்த்தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டதாகவும் அதில் விஷாலுக்கு பச்சை பூஞ்சை நோய்த்தொற்று இருப்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்தத் தகவல் தற்போது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

என்னை கருவாச்சின்னு நிறைய பேர் கிண்டல் செஞ்சாங்க: பாடகி ஸ்வாகதா பேட்டி

பாடகி மற்றும் நடிகையான ஸ்வாகதா தன்னை சிறுவயதில் கருவாச்சி என்று பலர் கிண்டல் செய்து உள்ளார்கள் என்று நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

சூரியனையே விழுங்கும் Blackholes… பேரண்டத்தில் அதிசயம் நிகழ்வது எப்படி?

அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி கருந்துளைகள் (Blackholes) என்பது மிகப்பெரிய கிரகம் அல்லது நட்சத்திரங்கள் அழியும்போது அல்லது

யுடியூபர் மதன் தலைமறைவு - குடும்பத்தினரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை....!

மதனின் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் இன்று விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள் எந்த வகை உணவுகள் சாப்பிடக்கூடாது....?

கொரோனா பாதித்தவர்கள் அந்த தொற்றின் தீவிரம் குறையும் வரை குறிப்பிட்ட சில உணவுகளை உண்ணக்கூடாது. இதற்கு காரணம் அந்த வகை உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு அழற்சி போன்றவற்றை குறைத்து விடும்

நிவாரண நிதி வழங்கி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த கலைப்புலி எஸ் தாணு

தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் அளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்