பிரபல பின்னணி பாடகி தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,February 14 2024]

35 வயது ஆன பிரபல பின்னணி பாடகி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் என்பவர் பல ஹிந்தி பாடல்களை பாடியுள்ளார் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு பாடகி மல்லிகா ராஜ்புத் தனது அறையில் தூங்க சென்ற நிலையில் அவரது அறையில் நீண்ட நேரம் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவரது தாயார் சந்தேகம் அடைந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை என்பதை எடுத்து ஜன்னலை திறந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கி இருப்பதை பார்த்து அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாடகி மல்லிகா ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவரது பெற்றோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 35 வயதேயான இளம் பாடகி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

விஜய் கட்சியின் சின்னம் இதுவா? மொத்தமா ஓட்டை அள்ளிருவாரு போல..!

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அவரது கட்சிக்கு எந்த சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்க்கு ஏமாற்றம்..  என்ன நடந்தது?

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் காலமான நிலையில் அவரது உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது

துரதிஷ்டவசமாக மிஸ் ஆன வெற்றிமாறன் - சிம்பு படம் ஆனால் அதிலும் ஒரு நன்மை கிடைச்சிருக்கு..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அளித்த பேட்டியில்

மிருணாள் தாக்கூரும் இல்லை, பாலிவுட் நடிகையும் இல்லை: 'எஸ்.கே.23' நாயகி இவர்தான்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 23 வது திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சாய்பல்லவிக்கு காதலர் தின வாழ்த்து சொன்ன விவாகரத்து பெற்ற நடிகர் .. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

நடிகை சாய் பல்லவிக்கு  விவாகரத்து பெற்ற நடிகர் ரொமான்ஸுடன் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.