போதைக்காக உயிரைவிட்ட 38 பேர்!!! தொடரும் அவலம்!!!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

 

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நேரத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத்தின் அமிர்தசரஸ், படாலா, டார்ன்தான் ஆகிய பகுதிகளில் போலி விஷ சாராயம் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விஷசாராயத்தை அருந்தியதால் கடந்த புதன்கிழமை முதல் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் உயிரிழப்பு 21 எனக் கூறப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒட்டுமொத்த உயிரிழப்பு 38 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதில் பஞ்சாப்பின் ஊரகப்பகுதிகளில் 10 பேரும், பாடாலா பகுதியில் 10 பேரும், டார்ன்தான் பகுதியில் 19 பேரும் உயிரிழந்து இருப்பதாக டிஜிபி டிங்கர் இப்தான் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அம்மாநில முதல்வர் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தர விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மக்கள் இப்படி விபரீத முடிவுகளில் இறங்க வேண்டாம் என்று அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்ற அச்சமும் அப்பகுதியில் எழுந்திருக்கிறது. நேற்று ஆந்திராவில் அதிகப் போதைக்காக சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்த விவகாரத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல நடிகை அணியும் மாஸ்க்கின் விலை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரத்தின் வாரிசாக இருந்தாலும் எப்போதும் எளிமையை விரும்புபவர் என்ற பெயரை பெற்றவர் நடிகை அலியா பட்.

மாணவர்களின் சேர்க்கை விகிதம்: கேரளாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகிக்கும் தமிழகம்!!!

கல்வித்துறையில் தமிழகத்தை பொறுத்தவரை 18-23 வயதுடைய மாணவர்களின் சேர்க்கை விகிதம் கேரளாவைவிட அதிகமாக இருக்கிறது

ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளி மரணம்: டிரைவரை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் ஆம்புலஸிலேயே அந்த நோயாளி இறந்து விட்டதால் நோயாளியின் உறவினர்கள்

பிரபல நடிகர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டிய வாலிபர் கைது!

பிரபல நடிகர் ஒருவர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்

இளையராஜாவின் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல் 

இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் பயன்படுத்தி வந்த அரங்கில் பல கோடி மதிப்புள்ள பொருள்களை வைத்து இருந்த நிலையில் அந்த பொருட்கள் தற்போது திருடு போய்விட்டதாக தகவல் வெளிவந்துள்ளதால்