close
Choose your channels
Kaatrin Mozhi

பிரபல நடிகரின் பிணத்துடன் செல்பி எடுத்த நர்ஸ்கள் பணிநீக்கம்

Saturday, September 1, 2018 • தமிழ் Comments

சமீபத்தில் சாலைவிபத்தில் முன்னாள் ஆந்திர முதல்வரின் மகனும், பிரபல நடிகரும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் ஹரிகிருஷ்ணாவின் உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக  வைக்கப்பட்டு இருந்தபோது அவரது உடலுடன் செல்பி எடுத்த அம்மருத்துவனையில் பணிபுரியும் நர்ஸ்கள் அந்த செல்பிகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

இந்த செல்பி புகைப்படங்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிணத்துடன் செல்பி எடுத்த நர்ஸ்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது நான்கு பேர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்தினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.