பீச்சில் பார்ட்டி, கும்மாளம் அடித்த 70 மாணவ, மாணவிகள்: 44 பேர்களுக்கு பாசிட்டிவ்

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதற்கு அந்நாட்டினர்கள் பொறுப்பு இல்லாமல் இருப்பதே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாண மாணவிகள் 70 பேர் கடற்கரையில் பார்ட்டி ஒன்றை சமீபத்தில் நடத்தியுள்ளதாகவும், அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட 70 மாணவ, மாணவிகளில் 44 பேருக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 70 மாணவ மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக அருகிலுள்ள Cabo San Lucas என்ற பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று பார்ட்டி வைத்து கொண்டாடினர். இந்த பார்ட்டி முடிந்த பின்னர் அவரவர் வீடுகளுக்கு தனித்தனியாக சென்றுள்ளனர்

இந்த நிலையில் தற்போது இந்த பார்ட்டியில் கலந்துகொண்டவர்களில் 44 மாணவ மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மீதி உள்ளவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென மருத்துவர்களும் ஆட்சியாளர்களும் மாறிமாறி வலியுறுத்திக் கொண்டிருப்பதை காற்றில் பறக்கவிட்டு ஒரே இடத்தில் பலர் கூடி பார்ட்டி நடத்திய மாணவர்கள் தற்போது பரிதாபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது