விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்: சொந்த வீடு வாங்கியதாகவும் தகவல்

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

நடிகர் விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் சென்னையில் சொந்த வீடு வாங்கியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் அந்த நிறுவனத்தின் மூலம் அவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது கூட இந்நிறுவனத்தின் மூலம் ’துப்பறிவாளன் 2’ மற்றும் ’சக்ரா’ ஆகிய படங்களை அவர் தயாரித்து வருகிறார்

இந்த நிலையில் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகாரில் தங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும், ஆறு வருடங்களாகப் பணி செய்து கொண்டிருந்த அவர் சிறிது சிறிதாக பணத்தை கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்

மேலும் கையாடல் செய்த பணத்தில் அவர் சொந்த வீடு வாங்கி உள்ளதாக தெரிய வந்ததாகவும், அதனால் அவர் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலாளர் ஹரி தனது புகாரில் தெரிவித்துள்ளார்

இந்த புகாரை பெற்றுக்கொண்ட வடபழனி உதவி ஆணையர் இது குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறைக்கு அந்த மனுவை அனுப்பி வைத்தார். கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டால் சென்னை மத்திய குற்றப்பிரிவு இந்த மனுவை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரூ.2 கோடி வரை என்னிடம் பேரம் பேசப்பட்டது: சாத்தான்குளம் சம்பவம் குறித்து சுசித்ரா திடுக்கிடும் தகவல்

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்த செய்தி முதலில் சாதாரணமாகத்தான் ஊடகங்களில் வெளியானது

நண்பர்களுடன் விஜய் மகனின் குரூப் போட்டோ: இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழலில் இருந்ததாகவும்,

ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு: மாஸ்க் அணிந்து பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதி

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெற்ற தாயை பேருந்து நிலையத்திலேயே விட்டு சென்ற மகன்: கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கொடுமை

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் மனிதர்களின் குணங்கள், நடவடிக்கையே மாறிவிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.