45 ஆண்டு கால ரஜினியிஸம் வேற லெவல்: பிரபல நடிகரின் டுவிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 வருடங்கள் நிறைவு பெறுவதை அடுத்து காமன் டிபி போஸ்டரை தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள் என்பதும் இந்த காமன் டிபி போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பாதம் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்து தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டுகள் கால திரையுலக சாதனைகளை தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தனது கடின உழைப்பு மற்றும் எளிமையால் அவர் ஒவ்வொருவருக்கும் குருவாக இருந்து வருகிறார். அவருடைய உடல் நலத்திற்காக நான் ராகவேந்திரா சுவாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன். குருவே சரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து விரைவில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்தபின்னர் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உலகின் விலையுயர்ந்த மாஸ்க்: விலை எத்தனை கோடி தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் உள்ள அனைவருமே மாஸ்க் அணிய வேண்டும் என உள்ளூர் சுகாதார மையம் முதல் உலக சுகாதார மையம் வரை அறிவுறுத்தியுள்ளது 

கோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்

கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கிய போது எதிர்பாராத வகையில் திடீரென விபத்துக்குள்ளானது

தமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி!!!

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை முறையை கொண்டுவர வேண்டும் என கடந்த மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது

'சென்னை 28' பட நடிகரின் தந்தைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே