தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர்? அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 50க்கு மேல் அதிகரித்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று மட்டும் தமிழகத்தில் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களில் 42 பேரும் டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என்றும் இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது என்பதும் இதில் டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் மட்டும் 679 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 60739 பேர் இருப்பதாகவும், கொரோனா வார்டில் 230 பேர் இருப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்துளார். மேலும் கொரோனா வார்டில் 28 நாட்கள் நிறைவு செய்யப்பட்டவர்கள் 32075 பேர் இருப்பதாகவும் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6095 என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சில அடி தூரத்தில் மகள் இருந்தும் நெருங்க முடியாத தாய்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸால் தினமும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

கொரோனா பரவல்;  உலகில் முக்கியத் தலைவர்களின் நேர்மறை, எதிர்மறை கருத்துகளின் தொகுப்பு!!!

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே உலகளவில் சில பொருத்தமற்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

நீங்கள் கதை பிரியர்களா? இதோ உங்களுக்காக ஒரு சேனல்

சினிமா செய்திகளை அவ்வப்போது சினிமா ரசிகர்களுக்கு சுடச்சுட தந்து கொண்டிருக்கும் Indiagitz, Newsglitz மூலம் டிரெண்ட்

நாட்டாமையின் வேற லெவல் ஃபெர்மாமன்ஸ்: வைரலாகும் அருண்விஜய் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

கமலுக்கு பதிலடியும் அஜித்துக்கு பாராட்டும் தெரிவித்த தமிழக அமைச்சர்

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கொரோனா நிவாரண நிதி கொடுத்த அஜித்துக்கு பாராட்டும் மத்திய மாநில அரசை விமர்சனம் செய்து கடிதம் எழுதிய கமல்ஹாசனுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது