தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு பாசிட்டிவ்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 பேர் என்றும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் இன்று மட்டும் 82 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து மொத்தம் 365 பேர் குணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இன்று யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பதால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆகவே உள்ளது. மேலும் இதுவரை தமிழகத்தில் 35 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்!!! மகிழ்ச்சித்தரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகள்!!!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சையில் தற்போது புதிய திருப்பத்தைக் கண்டுள்ளதாக மகிழ்ச்சித் தெரிவித்து இருக்கிறது.

24 மணி நேரத்தில் 991 பேருக்கு பாசிட்டிவ்: ஊரடங்கையும் மீறி இந்தியாவில் பரவும் கொரோனா

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 3 வரை நீடிக்கும்

கொரோனா ஊரடங்கால் 15 வருடங்கள் கழித்து இணைந்த தாயும் மகனும்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தாயும் மகனும் கொரோனா ஊரடங்கால் இணைந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவில் விமான சேவை தொடங்கும் தேதிகள் அறிவிப்பு

இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15 முதல் மே 3ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து

உலகம் முழுவதும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்!!! எப்போது நடைபெறும்??? விரிவான தொகுப்பு...

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.