இன்று ஒரே நாளில் 4985 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 5000ஐ நெருங்கிய நிலையில் இன்றும் அதே 5000ஐ நெருங்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சென்னையில் வழக்கம்போல் 1200 என்ற அளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,235 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 70பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,861 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,776 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 52,087 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 19,84,579 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

'ஜெய் பெரியார்' கேப்ஷனுடன் நிர்வாண போஸ் கொடுத்த மீராமிதுன்: நெட்டிசன்கள் கண்டனம்

https://tamil.asianetnews.com/gallery/cinema/netizens-slams-meera-mithu-for-posting-naked-photos-in-twitter-qdro30#image10

இறந்த தாயின் உடலை ஜன்னல் வழியே பார்த்து அழுத இளைஞர்: மனதை உருக்கும் புகைப்படம்

கொரனோவால் இறந்த தாயை அருகே சென்று பார்க்க அனுமதி கிடைக்காததால் ஜன்னல் வழியே பார்த்த இளைஞர் ஒருவரின் புகைப்படம் மனதை உருக்கும் வகையில் உள்ளது 

கொரோனா நேரத்தில் தயாரிப்பாளர் ஐசரிகணேஷின் அதிரடி அறிவிப்பு

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒரு கல்வியாளர் என்பதும், அவரது கல்வி நிலையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

20 வருடங்கள் உயிருக்கு போராடிய மணிரத்னம் பட நடிகை: தயாராகிறது திரைப்படம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படம் 'திருடா திருடா'. பிரசாந்த் மற்றும் ஆனந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஹீரா நாயகியாக நடித்திருந்தார்

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்படுகிறதா? போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதால் தமிழகம் முழுவதும் முருக பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.