சென்னை பாக்ஸ் ஆபீஸில் அசைக்க முடியாத இடத்தில் 'பாகுபலி 2'

  • IndiaGlitz, [Monday,May 22 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் நான்காவது வாரமாக வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் 100 ஆண்டுகால சினிமா வரலாற்றில் அதிகபட்ச தொகை வசூல் செய்தது இந்த படம் தான்.

கடந்த வாரம் சென்னையில் 19 திரையரங்குகளில் 318 காட்சிகள் திரையிடப்பட்ட 'பாகுபலி 2' திரைப்படம் ரூ.1,03,66,760 வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி நான்காவது வாரத்திலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.13,75,96,050 என்பதும் மூன்று மொழிகளில் சேர்த்து இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.15,68,34,340 என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள இந்த படத்தின் வசூலை முறியடிக்க எந்த படம் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அட்லியின் முதல் படத்திற்கு சென்னை பாக்ஸ் ஆபீஸின் நிலை என்ன?

'ராஜா ராணி', 'தெறி' என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, முதன்முதலாக தயாரித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

சாட்டிலைட் டிவியை அடுத்து விஷாலின் அடுத்த அதிரடி திட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக விஷால் தலையிலான இளைஞர் படை பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி திருப்பங்கள், அறிவிப்புகள் வெளிவந்து தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்...

ராதாமோகன்-அருள்நிதியின் 'பிருந்தாவனம்': திரை முன்னோட்டம்

'மொழி', 'அபியும் நானும்', 'கெளரவம்', 'உப்புக்கருவாடு' போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகனின் அடுத்த படைப்பு 'பிருந்தாவனம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் வெள்ளி அன்று வெள்ளித்திரைக்கு வருகிறது...

சமுத்திரக்கனியின் 'தொண்டன்': திரைமுன்னோட்டம்

கோலிவுட் திரையுலகில் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துகளுடன் கூடிய திரைப்படங்கள் உருவாக்கும் ஒருசில இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஜீவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய அரசியல் வருகை குறித்த பேச்சுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்...