திடீரென சாய்ந்து கொண்டிருக்கும் 5 மாடி குடியிருப்பு: பெங்களூரில் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

பெங்களூரில் கட்டிடம் ஒன்று திடீரென சாய்ந்து கீழே விழாமல் தொங்கி கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

பெங்களூரில் உள்ள ஹெப்பால் கேம்பபுரா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் ஒன்று திடீரென பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சரிந்துள்ளது. இந்த கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த கட்டிடம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

நேற்று மாலை திடீரென இந்த கட்டிடம் சிறிதளவு சாய்ந்ததாகவும், அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து கொண்டிருப்பதால் உள்ளே உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கட்டிடம் இன்னும் முழு அளவில் சாய வில்லை என்பதால் அந்த பகுதிக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

இந்த கட்டடம் ஐந்து வருடங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டது என்றும் இதன் உள்ளே மொத்தம் எட்டு வீடுகள் உள்ளது என்றும் ஐந்தே வருடத்தில் இப்படி கட்டிடம் சாயும் அளவுக்கு தரம் குறைந்த அளவில் கட்டி உள்ளார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறி உள்ளனர்

இந்த கட்டிடத்தில் உள்ள எட்டு குடும்பங்களில் உள்ள முப்பத்தி ஐந்து பேர்களும் பாதுகாப்பாக உடனடியாக வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அதேபோல் இந்த கட்டிடத்தின் எதிர் வீட்டில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் முழுவதுமாக விழுந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள் என்றும் இந்த கட்டிடத்தை கட்டியவர்கள் யார்? கட்டிடத்தை கட்ட அனுமதி கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவரிடமும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் தெரிகிறது

More News

தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும்: பிரபல நடிகர்

நாடு முழுவதும் செல்வாக்குள்ள கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் மட்டும் பின்தங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தும்

வருமான வரி அதிகாரிகள் மீது விஜய் வழக்கு போடட்டும்: பாஜக பிரமுகர் கருத்து

'பிகில்' படத்தின் வசூல் குறித்த வெளியான மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அடுத்து வருமான வரித்துறையினர் அந்த படத்தின் தயாரிப்பாளர்,

விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க அவருக்கு நல்லதுதான்: பட்டிமன்ற பிரபலம்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்து எந்தவொரு ஆவணமும் சிக்கவில்லை என்று தகவல் அளித்துள்ள நிலையில்

திருமணத்தின் மீதான நம்பிக்கையே உங்களால் தான் வந்தது: சாந்தனு வாழ்த்து

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் தன்னுடன் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' என்ற படத்தில் நடித்த நடிகை பூர்ணிமாவை கடந்த 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

CAA க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஐந்தாவது மாநிலம்..!

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.