LKG-க்கே தேர்வு நடக்கிறது.. சிறப்பு பயிற்சி கொடுங்கள்..! பொதுத் தேர்வு கேள்விக்கு செங்கோட்டையன் பதில்.

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

8-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளி நேரத்திலேயே பயிற்சி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை மத்திய அரசின் ஆணைப்படி, 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் (நடப்பு ஆண்டு) 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாகும். கிராமங்களில் ஏழை மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுவார்கள் என்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும் எச்சரித்தனர். எனினும் அரசு, பொதுத்தேர்வு நடக்கும் என்றும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு யாரும் ஃபெயில் ஆக்கப்பட மாட்டார்கள் எனவும் உறுதிப்படுத்தியது.

இதற்கிடையே 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படாது என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி முடிந்த பிறகு ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறியதாக வெளியானது தவறான செய்தி. பள்ளி நடைபெறும் போதே ஒரு மணிநேரத்துக்குப் பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்து அவர் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான்.

ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் குறித்து ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார். இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டு, அவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளேன்.

தனியார் பள்ளிகளில் எல்கேஜிக்கே நுழைவுத் தேர்வு எனும்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தக் கூடாதா? ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயர பொதுத் தேர்வு அவசியம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

More News

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க 8 வழிமுறைகள்-  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சந்தோஷமாக ரிப்பன் வெட்டி.. குத்து விளக்கேற்றி.. கரோனா வைரசுக்கு தனி வார்டு திறப்பு..! எங்கு தெரியுமா?!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'கரோனா' வைரஸ் சிறப்பு வார்டு, கோலமிடப்பட்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த முதல் முயற்சி.. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு..!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் (The Peter Doherty Institute for Infection and Immunity) இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கொரோனா வைரஸ் மாதிரியை உருவாக்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்!

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும் வெகு அரிதாகவே மற்ற இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி வருகிறார்.

ஃபேஸ்புக் இளைஞருடன் போனில் பேசிய மனைவி: கணவர் செய்த விபரீத செயல்

பேஸ்புக்கில் நட்பான இளைஞர் ஒருவரிடம் தனது மனைவி மணிக்கணக்காக மொபைல் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது